ஹர்திக் விளையாட தடை - மீண்டும் மும்பை கேப்டனாகும் ரோஹித் சர்மா?
முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025
ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் முதல் போட்டி மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது. அதில் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ஐபிஎல் நிர்வாகம் விதித்த ஒரு போட்டி தடை காரணமாக அவர் சென்னை அணிக்கு எதிரான போட்டியை விளையாடமாட்டார். ஹர்திக் இல்லாததால், முதல் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக முதல் சாய்ஸாக ரோஹித் சர்மா உள்ளார்.
கேப்டனாகும் ரோஹித்?
ரோஹித் மறுக்கும் பட்சத்தில், இந்திய டி20 அணியின் தற்போதைய கேப்டனான சூர்யகுமார் யாதவ், இந்தப் போட்டியில் மும்பை அணியை வழிநடத்தலாம். முன்னதாக சூர்யகுமார் யாதவ் ஒருசில போட்டிகளில் மும்பை அணியை கேப்டனாக வழிநடத்தி இருக்கிறார்.
2024 சீசனில் குரூப் ஸ்டேஜின் கடைசி போட்டியில் மும்பை அணி லக்னோ அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் மும்பை அணி மெதுவாக ஓவர்களை வீசியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மெதுவாக ஓவர்களை வீசியதற்காக, ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்ததுடன், அவருக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.