போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட் - ஹர்திக்கை நம்பி ஏமாந்த அம்பானி - சோகத்தில் மும்பை!

Jiyath
in கிரிக்கெட்Report this article
மும்பை இந்தியன்ஸ் அணி கிட்டத்தட்ட பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளது.
ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
முன்னதாக மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா இருந்து வந்தார். ஆனால், இந்த ஆண்டு அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மும்பை அணியின் உரிமையாளர்களான அம்பானி குடும்பம். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அணி நிர்வாகம்
முன்னதாக அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக 2 சீசன்களில் ஒரு முறை கோப்பை வென்று கொடுத்தார். மற்றொரு முறை இறுதிப்போட்டி வரை அணியை அழைத்துச் சென்றிருந்தார். எனவே ஹர்திக் பாண்டியவை கேப்டனாக நியமிப்பதன் மூலம் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணி கோப்பை வென்று விடும் என்று அணி நிர்வாகம் நம்பியது.
ஆனால், தற்போது வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளது. இதனால் மும்பை அணி நிர்வாகமும் அந்த அணியின் ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.