ரோஹித் ஷர்மா கையில் இருந்த பொருள்; திடீரென நிறுத்தப்பட்ட ஆட்டம் - என்ன நடந்தது?
மும்பை - டெல்லி இடையிலான போட்டியில் மைதானத்திற்குள் கருப்பு பட்டம் ஒன்று வந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
மும்பை - டெல்லி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியானது டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 258 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கருப்பு நிற பட்டம்
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது கருப்பு நிற பட்டம் ஒன்று பிட்சின் குறுக்கே வந்துள்ளது. அதனை பிடித்த ரோஹித் ஷர்மா டெல்லி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கொடுத்தார். அப்போது அந்த பட்டத்தை அவர் பறக்க வைக்க முயற்சி செய்தார்.
பின்னர் பறக்காத அந்த பட்டத்தை ரிஷப் பண்ட் ஸ்கொயர் லெக் அம்பயரிடம் கொடுத்தார். இதனால் ஆட்டமானது சிறிது நேரம் தடைபட்டது . ஆனால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் இந்த நிகழ்வை சிறுது நேரம் ரசித்துப் பார்த்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Rohit Sharma giving Rishabh Pant the kite - Pant flying it. ?? pic.twitter.com/uqxmmcLBGE
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 27, 2024