ரோகித் கொடுத்த அழுத்தம் - பணிந்த ஹர்திக்? நேற்றைய போட்டியில் இதனை கவனிச்சீங்களா

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians
By Karthick Apr 19, 2024 04:21 AM GMT
Report

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி பஞ்சாப் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

MI vs PBKS

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 8 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா - சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

hardik-bowling-4-overs-rohit-pressure

25 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 2 ஃபோர் - 3 சிக்ஸர்களுடன் 36 ரன்களை எடுத்து வெளியேறினார். நிலைத்து நின்று விளையாடிய சூர்யகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 ஃபோர் - 3 சிக்ஸர்களுடன் 78 ரன்களை விளாசி வெளியேறினர்.

T20 WC விளையாட இத பண்ணிதான் ஆகணும்!! ஹர்திக்கிற்கு டிராவிட் - ரோகித் கொடுக்கும் நெருக்கடி?

T20 WC விளையாட இத பண்ணிதான் ஆகணும்!! ஹர்திக்கிற்கு டிராவிட் - ரோகித் கொடுக்கும் நெருக்கடி?

அதே போல திலக் வர்மா 34(18), டிம் டேவிட் 14(7) ரன்களை அதிரடியாக எடுத்து நிலையில், மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டில் 192 ரன்களை குவித்தது.

hardik-bowling-4-overs-rohit-pressure

193 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் சாம் கரண் 6(7) , பிராப்சிம்ரன் சிங் 0(1), ரிலே ரூஸோவ் 1(3), லியாம் லிவிங்ஸ்டன் 1(2), ஹர்ப்ரீத் சிங் பாட்டியா 13(15) என அடுத்தடுத்து வெளியேறியனர்.

மும்பை அணியில் ஜெரால்டு கோட்ஸி, பும்ரா 2 விக்கெட்டை வீழ்த்தி பெரும் நெருக்கடியை உருவாக்கினார்.

hardik-bowling-4-overs-rohit-pressure

இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷஷாங்க் சிங் மற்றும் அஷ்டோயூஷ் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அதிரடியாக விளையாடி, ஷஷாங்க் சிங் 41(25), அஷ்டோயூஷ் சர்மா 61(28) ரன்களை சேர்த்து கடைசி நேரத்தில் அவுட்டாகினர்.

பணிந்த ஹர்திக்?

முடிவில் பஞ்சாப் அணி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

hardik-bowling-4-overs-rohit-pressure

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 7 போட்டிகள் விளையாடி அதில் 3 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா முழுமையாக 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இது தான் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. கடந்த சில போட்டிகளாக ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை.

ஹர்திக் பாண்டியாவிற்காக இப்படியா ? அம்பானி போட்ட ஸ்கெட்ச் - காலியான 3 Team

ஹர்திக் பாண்டியாவிற்காக இப்படியா ? அம்பானி போட்ட ஸ்கெட்ச் - காலியான 3 Team

ஆனால், டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவேண்டும் என்றால், ஐபிஎல் தொடரில் பந்துவீசவேண்டும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா நிபந்தனை வைத்ததாக தகவல் வெளிவந்தது.

hardik-bowling-4-overs-rohit-pressure

அதன் வெளிப்பாடாகவே ஹர்திக் பாண்டியா நேற்றைய ஆட்டத்தில் முழுமையாக 4 ஓவர்களை வீசினர் என்றும் ரசிகர்கள் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்