ஹர்திக் பாண்டியாவிற்காக இப்படியா ? அம்பானி போட்ட ஸ்கெட்ச் - காலியான 3 Team
ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகின்றார்.
ஹர்திக் பாண்டியா
குஜராத் அணியின் முதல் ஐபிஎல் தொடரியேயே(2022) அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா. அடுத்த சீசனிலும்(2023) இறுதி போட்டியில் தான் குஜராத் அணி தோல்வியடைந்தது.
குஜராத் அணி மும்பை, சென்னை ஈடாக பெரிய அணியாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், குஜராத் அணியை விட்டு நீங்கினார் ஹர்திக் பாண்டியா. மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய அவர் அணியின் கேப்டனாக மாறினார். இது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி வருவது தெரிந்த விஷயமே.
இதில், ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி திரும்ப பெற பல டிரேடிங்கில் ஈடுபட்டது. மும்பை அணியில் இருந்து 17 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் RCB அணிக்கு trade செய்யப்பட்டார். குஜராத் அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
குஜராத் அணியில் புதியதாக ஷாரூக் கான், ஆப்கான் வீரர் ஒமர்சாய் ஆகியோரை ஏலத்தில் எடுத்தது. RCB'க்கு சென்ற கேமரூன் கிரீன் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என RCB நிர்வாகம் நம்பியது. ஏனென்றால் அவர், மும்பை அணியில் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Total Damage
பெரிய கணக்குகளை போட்ட இந்த 3 அணிகளும் தற்போது வரை ஐபிஎல் தொடரில் சறுக்கலை தான் சந்தித்து வருகின்றது. மும்பை அணி 6 போட்டிகளில் விளையாடி 2'இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட மும்பை அணி ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதால் பெரும் விமர்சனத்தை பெற்று வருகின்றது.
அதே நேரத்தில், 7 போட்டிகளில் விளையாடியிருக்கும் RCB அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. குஜராத் அணி நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி அணியிடம் 89 ரன்களில் சுருண்டது.
அந்த அணி 7 போட்டிகளில் 3'இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தொடருக்கு முன்பாக இந்த அணிகளின் trading மட்டும் சுமார் 115 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அப்படி செலவு செய்தும் குறிப்பிடத்தக்க ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இந்த அணிகள சறுக்கலை சந்தித்துள்ளது. இதனை மும்பை அணிக்காக ஹர்திக் பாண்டியாவிற்காக அம்பானி போட்ட ஸ்கெட்ச் 3 அணிகளை காலி செய்துள்ளது என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.