தோனி போல சாயல் உள்ளதா? தினேஷ் கார்த்திக் டீம்'க்கு வேண்டாம் - முன்னாள் வீரர் காட்டம்
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து வருகின்றார் தினேஷ் கார்த்திக்.
தினேஷ் கார்த்திக்
ஆர்.சி.பி அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான் தினேஷ் கார்த்திக், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இது வரை அந்த அணி விளையாடிய 7 ஆட்டங்களில் அவர 226 ரன்களை குவித்துள்ளார்.
குறிப்பாக, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய ஆட்டத்தில் தனி நபராக எட்டமுடியாத இலக்கை நெருங்கினார் தினேஷ் கார்த்திக். 35 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்ஸ், 5 ஃபோர்களுடன் 83 ரன்களை குவித்து மிரள வைத்தார்.
பலரும் அவரை பாராட்டி வரும் நிலையில், வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடமளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தலாக எழுந்து வருகின்றன.
தினேஷ் கார்த்திக் வேண்டாம்
ஆனால், அதற்கு நேர்மறையாக முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது வருமாறு, உச்சகட்ட பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திகை நான் கண்டிப்பாக பாராட்டுவேன். ஆனால் இந்திய அணியும், உலகக்கோப்பையும் வித்தியாசமானது.
அங்கு ஐபிஎல் போல சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் கிடையாது. இம்பேக்ட் வீரர் விதிமுறையும் இருக்காது என்பதால் பேட்டிங் செய்வது வித்தியாசமான அழுத்தத்தை கொடுக்கும்.
தோனியை போன்ற சாயல் குறித்த பேச்சிற்கு தோனி இல்லாத போது ரிஷப் பண்ட் பார்மில் இல்லை என்றால் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வேன். கார்த்தி-க்கு பதிலாக சஞ்சு சாம்சனை கருத்தில் கொள்வேன்.ராயுடு CSK வீரர் என்பதால், அவர் ஒரு டாடி டீமை உருவாக்க நினைக்கலாம்.