T20 WC விளையாட இத பண்ணிதான் ஆகணும்!! ஹர்திக்கிற்கு டிராவிட் - ரோகித் கொடுக்கும் நெருக்கடி?
வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியின் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
உலககோப்பை டி20
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 4-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பையை நடத்த ஐசிசி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அந்நாடுகளில் 10 மைதானங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வு செய்து இந்திய அணியில் விளையாட வைக்க பிசிசிஐ தீவிரம் காட்டி வருகின்றது. கேப்டனாக ரோகித் சர்மாவே நீடிப்பார் என்பது அறிவிக்கப்பட்ட நிலையில், அணி தேர்வு இன்னும் முடியவில்லை.
ஒவ்வொரு ஐபிஎல் போட்டியை கண்காணித்து வரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட், ரோகித் சர்மாவுடன் அவ்வப்போது ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றார்.
நெருக்கடி?
மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா மீது தனி கவனமும் இந்திய அணி நிர்வாகம் வைத்துள்ளது. ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கடந்த சில காலமாக பந்துவீசுவதை தவிர்த்து வருகின்றார்.
மும்பை அணிக்கு கூட அவர், ஒரு சில போட்டிகளில் பந்து வீசவில்லை. இந்த சூழலில் தான் அவருக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் ரோகித் ஆலோசனை ஒன்று அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது இந்திய அணியில் இடம்பெறவேண்டும் என்றால், அவர் ஐபிஎல் போட்டிகளில் நிறைய பந்துவீச்சில் ஈடுபடவேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. பௌலிங்கில் அவர் பழைய ஃபார்மிற்கு திரும்பவே இந்த நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.