சந்தோசமாக இருப்பது போல காட்டிக்கொள்கிறார் ஹர்திக்..ஆனா - முன்னாள் வீரர் வேதனை
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி நேற்று சென்னைக்கு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது.
ஹர்திக் பாண்டியா
இந்த சீசனில் மும்பை அணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. கேப்டனாக பதவியேற்ற ஹர்திக் பாண்டியா தொடர்ந்து பெரும் சவால்களையும், ரசிகர்களின் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகின்றார்.
குறிப்பாக ரோகித் சர்மா மாற்றப்பதற்கு இன்னும் ஹர்திக் மீது ரசிகர்கள் தொடர்ந்து அதிருப்தியை மைதானத்தில் வெளிப்படுத்தி வருகின்றார். இது ஒட்டுமொத்த அணி நிர்வாகத்தின் முடிவு என்று கூறப்படும் நிலையில், ஏற்றுக்கொண்டு விளையாடும் ரோகித்தையும், ஹர்திக்கையும் ஊக்குவிக்காமல் ரசிகர்கள் விமர்சிப்பது வேதனைக்குரிய விஷயம் ஒன்றே.
சந்தோசமாக இருப்பது போல
ஹர்திக் பாண்டியா குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன் பேசியது வருமாறு, ஹர்திக் பாண்டியா டாஸ் போடும்போதும் பேட்டிங் செய்ய வரும்போதும் அளவுக்கு அதிகமாக சிரித்த முகத்துடன் இருக்கிறார்.
மகிழ்ச்சியாக இருப்பதுபோல தன்னை காட்டிக்கொள்ள முயல்கிறார். ஆனால், அவர் உண்மையில் வருத்தத்தில் உள்ளார். ரசிகர்கள் BOO செய்து முழக்கமிடுவது போன்ற விஷயங்கள், ஹர்திக்கை காயப்படுத்தியுள்ளது.
இது அவரது கேப்டன்சியை பாதிக்கிறது. அவரது இடத்தில் நானும் இருந்திருக்கிறேன். இது மிகவும் கடினமான சூழல்.