ரோகித்தின் பழிவாங்கும் திட்டமா? அணியில் இருந்து கழட்டிவிடப்படும் ஹர்திக் - அதிர்ச்சி தகவல்

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians
By Karthick Apr 15, 2024 04:56 AM GMT
Report

ஹர்திக் பாண்டியாவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா போட்டிகளில் தொடர்ந்து திணறி வருகின்றார்.

ஹர்திக் பாண்டியா

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. ரசிகர்கள் அப்போது முதலே அவருக்கு எதிராகவே இருந்து வருகின்றார்.

rohit-plan-hardik-pandya-out-of-team

ரோகித் தான் மீண்டும் கேப்டனாக வேண்டும் என்றும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதே நேரத்தில் நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

rohit-plan-hardik-pandya-out-of-team

முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 206 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது.

ஓய்வு குறித்த சிந்தனை...சர்ச்சைக்கு மத்தியில் திடீரென ஷாக் கொடுத்த ரோகித்

ஓய்வு குறித்த சிந்தனை...சர்ச்சைக்கு மத்தியில் திடீரென ஷாக் கொடுத்த ரோகித்

கழட்டிவிடப்படும் 

இதன் மூலம் அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 2'இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் நேற்று அதிரடியாக விளையாடிய மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.

rohit-plan-hardik-pandya-out-of-team

இந்நிலையில், முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டல் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் இருக்கும் பட்சத்தில் அவரை 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்காமல் போக வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.