ஓய்வு குறித்த சிந்தனை...சர்ச்சைக்கு மத்தியில் திடீரென ஷாக் கொடுத்த ரோகித்
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் சர்மா
பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்த போதும், கோப்பையை வெல்ல முடியாமல் இருந்து வந்த மும்பை அணி வரிசையாக 5 முறை கோப்பையை வென்று கொடுத்தவர் ரோகித் சர்மா.
மும்பை அணியை அடுத்து இந்திய அணிக்கும் கேப்டனான அவர், உலகக்கோப்பை டெஸ்ட் இறுதி போட்டி, ஒரு நாள் இறுதிப்போட்டி என இரண்டிலும் தோல்வியடைந்தார். ஆனால், அவருக்கு உலகக்கோப்பையை வெல்ல மற்றுமொரு வாய்ப்பு உள்ளது.
வரும் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. அதில் கோப்பையை வெல்ல அவருக்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. சிறப்பாக அணியை வழிநடத்தி வரும் ரோகித், நிச்சயமாக இம்முறை கோப்பையை வென்று விடுவார் என்ற பெரும் நம்பிக்கையில், இந்திய அணி ரசிகர்கள் காத்துள்ளனர்.
அதே நேரத்தில், நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணி கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. கேப்டனாக ரோகித் சர்மா, மாற்றப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் இன்னும் ஹர்திக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
ஓய்வு
ரோகித் வேறு அணிக்கு போகிறார், அவருக்கு ஹர்திக் பாண்டியாவிற்கும் இப்படி ஒரு பிரச்சனை, மைதானத்தில் அவுமானப்படுத்திய சம்பவம் என்றெலாம் நாளுக்கு ஒரு 10 செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.
இந்நிலையில் தான் தன்னுடைய பேட்டி ஒன்றில் ஓய்வு பெறுவதை குறித்து ரோகித் பேசியது வைரலாகி வருகின்றது. அதாவது இப்போது நன்றாக நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறி, இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் நிச்சயமாக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவேன் என்றார்.
தன்னை பொறுத்தவரையில் வரும் உலக கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்பது தலையாய இலக்கு என குறிப்பிட்ட ரோகித், அதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் கட்டாயமாக வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.