முரண்டு பிடிக்கும் ரோகித்...ஸ்கெட்ச் போடும் ஆகாஷ் அம்பானி - முடியுமா தகராறு?

Rohit Sharma Mumbai Indians IPL 2024
By Karthick Apr 12, 2024 02:42 AM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மும்பை வெற்றி

4 போட்டிகளில் முதல் 3'இல் தோல்வியடைந்த போதிலும், டெல்லி அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் களமிறங்கிய மும்பை அணி நேற்று பெங்களூருவை எதிர்கொண்டது.

ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி விபூதி அடித்த சகோதரர் - அதிரடியாக கைது செய்த போலீஸ்

ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி விபூதி அடித்த சகோதரர் - அதிரடியாக கைது செய்த போலீஸ்

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் கேப்டன் டுபிளேஸிஸ், ரஜத் பட்டிதர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 196 ரன்களை குவித்தது.

akash-ambani-talks-with-rohit-sharma-mumbai-indian

பின்னர் களமிறங்கிய மும்பை அணி துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஓப்பனார் இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்னும் விளாச, 27 பந்துகளை மிச்சம் வைத்து மும்பை அணி 15.3 ஓவர்களில் 199'ஐ எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

சமாதானம்

பழைய ஃபார்மிற்கு மும்பை அணி திரும்பியுள்ள நிலையில், ரசிகர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இருப்பினும் இன்னும் ரோகித் - ஹர்திக் பாண்டியா விவகாரம் ஒளித்து கொண்டே தான் இருக்கின்றது. அதனை, சரி செய்யவே மும்பை அணி நிர்வாகம் தற்போது பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

akash-ambani-talks-with-rohit-sharma-mumbai-indian

அணி வெற்றி திரும்பியதன் காரணத்தால், ரசிகர்கள் பிரச்னையை மறந்து விடுவார்கள் என நிர்வாகம் நம்புகிறது. அதே போல, ரோகித் சர்மாவிடமும் சுமுக பேச்சுவார்த்தையில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு அணிக்கு ரோகித்தை அனுப்ப விரும்பாத காரணத்தால் தான், அண்மையில் ஆகாஷ் அம்பானி ரோகித் சர்மாவுடன் ஒரே காரில் பயணித்து சமாதானம் பேசினார் என்றெல்லாம் கூறப்படுகிறது.