ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி விபூதி அடித்த சகோதரர் - அதிரடியாக கைது செய்த போலீஸ்
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் அவரது சகோதரரே 4 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாக அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹர்திக் - குர்ணல்
கிரிக்கெட் வீரர் சகோதர்களான ஹர்திக் - குர்ணல் பாண்டியா இந்தியா கிரிக்கெட் துறையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மும்பை அணியில் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவும், லக்னோ அணியில் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் குர்ணல் பாண்டியாவும் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஆட்டக்காரர்களாகவே இருக்கிறார்கள்.
கிரிக்கெட்டில் சம்பாதிக்கும் பணத்தை பயன்படுத்தி சகோதர்கள் இருவரும் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரான வைபவ் பாண்டியாவுடன் இணைந்து தொழில் ஒன்றை துவங்கியுள்ளனர். ஹர்திக் - குர்ணல் பாண்டியா இருவரும் தலா 40 சதவீதம் முதலீடு செய்த நிலையில், அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடு செய்திருக்கிறார்.
மேலும், நிறுவனத்தின் மேற்பார்வையையும் வைபவ் பாண்டியாவே கவனித்து வந்துள்ளார்.
போலீஸ் அதிரடி
இச்சூழலில், வைபவ் பாண்டியா அந்நிறுவனத்தில் கிடைத்த வர்த்தகத்தை பயன்படுத்தி மற்றொரு நிறுவனத்தை தொடங்கியிருப்பதும் பாண்டியா சகோதரர்களிடம் கூறவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, கூட்டாக துவங்கிய ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், வைபவ் பாண்டியா பாலிமர் நிறுவனத்தின் லாபத்தின் பங்கை 20 சதவீதத்திலிருந்து 33.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறார்.
அதனை தொடர்ந்து தான் விஷயம் ஹர்திக் பாண்டியாவிற்கு தெரியவர இது குறித்து வைபவ் பாண்டியாவிடம் விஷயத்தை கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து இரு தரப்பிற்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது, உன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடுவேன் என்று வைபவ் பாண்டியா மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சூழலில், ஹர்திக் பாண்டியா மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வைபவ் பாண்டியாவை நேற்று போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You May Like This Video