MI சரியா நடத்தல...ரோகித் வேற டீம் போறது உறுதி - விஷயத்தை போட்டுடைத்த MI முன்னாள் வீரர்!!

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians Mumbai IPL 2024
By Karthick Apr 11, 2024 02:21 AM GMT
Report

ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்ட்டது முதல் தொடர்ந்து மும்பை அணியில் சலசலுப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

திணறும் மும்பை

ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது முதல் தொடர்ந்து பெரும் விமர்சனத்தை பெற்று வருகின்றது மும்பை இந்தியன்ஸ் அணி. சமூகவலைத்தளங்களை தாண்டி இது கடைசியாக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் எதிரொலித்தது.

former-mi-player-says-rohit-sharma-is-leaving-mi

ஆனால், கடைசியாக டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது. இருப்பினும் அணிக்குள் புகைச்சல் இருப்பதாக இன்னும் செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஹர்திக் கீழ் விளையாட முடியாது - ரோகித்தை தொடர்ந்து விலக முடிவெடுத்த MI நட்சத்திரங்கள்

ஹர்திக் கீழ் விளையாட முடியாது - ரோகித்தை தொடர்ந்து விலக முடிவெடுத்த MI நட்சத்திரங்கள்

ரோகித் போயிடுவாரு..

ரோகித் சர்மா இந்த ஆண்டு தொடர் முடிந்ததும் அணியை விட்டு விலகுகிறார் என்ற கருத்துக்களும் வலுவாகவே நீடித்து வருகின்றது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படாத தகவலே.

former-mi-player-says-rohit-sharma-is-leaving-mi

இந்த சூழலில் தான், தற்போது ,மும்பை அணியின் முன்னாள் வீரர் ரோகித் நிச்சயமாக அணியை விட்டு விலக போகிறார் என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

சென்னை அணியில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு மும்பை அணிக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் தான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

former-mi-player-says-rohit-sharma-is-leaving-mi

இது குறித்து அவர் பேசியது வருமாறு, நாம் என்ன கூறினாலும் இறுதியில் அனைத்தும் ரோகித் சர்மாவின் முடிவு தான். அவர் விரும்பினால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவரை கேப்டனாக நியமிப்பதை நிச்சயமாகஅனைத்து அணிகளும் விரும்புவார்கள். மும்பை அணியில் தற்போது நடந்தது போல் இல்லாமல் மற்ற அணிகள் ரோகித் சர்மாவை சரியாகக் கையாளும் விதத்தில், அவர் நிச்சயமாக வேறு அணிக்குச் செல்வார்.