ஹர்திக் கீழ் விளையாட முடியாது - ரோகித்தை தொடர்ந்து விலக முடிவெடுத்த MI நட்சத்திரங்கள்
ரோகித் சர்மாவை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து முக்கிய வீரர்களும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திணறும் மும்பை
ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது முதல் தொடர்ந்து பெரும் விமர்சனத்தை பெற்று வருகின்றது மும்பை இந்தியன்ஸ் அணி. சமூகவலைத்தளங்களை தாண்டி இது கடைசியாக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் எதிரொலித்தது.
ரசிகர்கள் பெரிதாக ஹர்திக்கை விமர்சிப்பதை தாண்டி, அந்த அணியும் தொடரும் பெரிதாக பின்னடைவை சந்தித்துள்ளது. 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீண்டும் மும்பை அணியின் கேப்டன் பதவியை ஏற்குமாறு மும்பை அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியான நிலையில், அதனை உறுதியாக மறுத்து, அடுத்த ஆண்டு தன்னை அணியில் இருந்து வெளியிடவும் ரோகித் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
விலகும் வீரர்கள்
இந்த செய்தியே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், இதனை தொடர்ந்து அடுத்த சில வீரர்களும் அணியில் இருந்து தங்களை விடுவிக்கும் படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதாவது முக்கிய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் போன்றோரும் தங்களை அடுத்த ஆண்டு அணியில் இருந்து நீக்கும் படி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
இது மும்பை அணி நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவான ஒன்றாகும். முன்னாள் கேப்டன், முன்னணி பந்துவீச்சாளர், நட்சத்திர பேட்ஸ்மேன் போன்றோர் அணியை விட்டு நீங்குவது அவர்களுக்கும் பெரிய பின்னடைவான விஷயமே.
விலகும் பலரும் ஹர்திக் பாண்டியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இன்னல்களை எவ்வாறு கையாண்டு மும்பை அணியும் ஹர்திக் பாண்டியாவும் தொடரில் முன்னேறுவார்கள் என்பது கேள்விக்குறியே.