உங்க சவகாசமே வேண்டாம் இனி - MI'யை விட்டு வெளியேறும் ரோகித் சர்மா..?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை அணியில் இருந்து விலகும் முடிவில் ரோகித் சர்மா இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரோகித் சர்மா
மும்பை அணி துவண்டு போயிருந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா தொடர்ந்து 5 முறை கோப்பையை அந்த அணிக்கு வென்று கொடுத்தார்.
2013,2015,2017,2019,2020 என தொடர் கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா மும்பை அணியை மிக பலம் வாய்ந்த அணியாக ஐபிஎல் தொடரில் உருவாக்கினார்.
கேப்டனாக, ஓப்பனராக சிறப்பாக செயல்பட்ட அவருக்கு பெரும் அளவில் ரசிகர்கள் குவிந்தனர். கடந்த 3 சீசனாக கோப்பையை வெல்ல முடியாமல் போன மும்பை அணிக்கு இந்த வருடம் புது கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவே பெரும் பின்னடைவை அந்த அணிக்கு கொடுத்துள்ளதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றார். அதே போலவே, 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது மும்பை அணி.
விலகல்
இதனால் இந்த விமர்சனங்கள் மேலும் அதிகரித்துள்ளது. மீண்டும் ரோகித் சர்மா கேப்டனாக வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நேரத்தில்,தொடர் தோல்வியால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சரிசெய்ய மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மாவிற்கு மீண்டும் கேப்டன் பதவியை அளித்துள்ளது.
ஆனால், அதனை மறுத்துள்ள ரோகித் சர்மா அடுத்த ஆண்டு தான் மும்பை அணியிலும் விளையாடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளதாக கருத்துக்கள் வெளிவந்துள்ளது.
இரண்டுமே மும்பை அணிக்கு தான் பெரும் பின்னடைவான விஷயமாகும். பிளே-ஆப் போட்டியில் நீடிக்க இனி வரும் போட்டிகளில் மும்பை வெல்வது மிக அவசியமாகும். அதே நேரத்தில் இப்படிப்பட்ட இறுக்கமான நிலையில் ரோகித் சர்மா அணியை விட்டு விலகினால், அது அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி விடும் என்பதில் சந்தேகமில்லை.