ஹர்திக் பாண்டியா போதும்...மீண்டும் கேப்டனாகும் ரோகித் சர்மா - MI மாஜி வீரர் அதிரடி
தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கும் மும்பை அணிக்கு மீண்டும் ரோகித் சர்மா கேப்டனாக இருப்பதாக மாஜி வீரர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்
5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தொடர் துவங்குவதற்கு முன்பாகவே கேப்டன் மாற்றப்பட்டால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
அதனை தொடர்ந்து விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து மும்பை அணி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரசிகர்களால் மிகவும் விமர்சிக்கப்படுகிறார்.
மீண்டும் கேப்டனாக....
மும்பையில் நடைபெற்ற மைதானத்திலேயே அவருக்கு ரசிகர்கள் எதிராக இருந்ததும், அவருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பரபரப்படுத்துமாக தொடர்ந்து பின்னடைவை தான் மும்பை அணி சந்தித்து வருகின்றது.
இந்த சூழலில் தான், மும்பை அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி மீண்டும் ரோகித் கேப்டனாக நியமிக்கப்படலாம் என கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "அணி நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களைப் பொறுத்தவரையில், அதிரடி முடிவுகளை எடுக்கத் தயங்குவதில்லை என குறிப்பிட்டு, கேப்டன் பதவியை எடுத்து ஹர்திக்கிடம் கொடுத்தபோது அதனை ஆரம்பித்துவிட்டார்கள் என்றார்.
5 பட்டங்களை வென்று கொடுத்த கேப்டனை மாற்றுவது என்பது மிக பெரிய விஷயம் என சுட்டிக்காட்டிய மனோஜ் திவாரி, ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், கேப்டன் பதவி என்பது பலவீனமான ஒன்றாக உள்ளது என்றார்.
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் சுமாரானது தான் என்ற அவர், எனவே கிரிக்கெட் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு ரோகித்தை மீண்டும் கேப்டனாக மாற்றப்படவேண்டும் என்று நினைப்பதாக குறிப்பிட்டார்.