திரும்ப அவரை ஆர்சிபி கேப்டனாக்குங்க.. அப்படி செஞ்சா மட்டும்தான் - ஹர்பஜன் சிங் ஆதங்கம்!

Virat Kohli Royal Challengers Bangalore Harbhajan Singh IPL 2024
By Sumathi Apr 12, 2024 01:31 PM GMT
Report

ஆர்சிபி அணியின் தொடர் தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

rcb

இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இனிவரும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

ஹர்திக்கை எதிர்க்க வேண்டாம்; சிக்னல் காட்டிய விராட் - சம்பவத்தை கவனிச்சீங்களா?

ஹர்திக்கை எதிர்க்க வேண்டாம்; சிக்னல் காட்டிய விராட் - சம்பவத்தை கவனிச்சீங்களா?

ஆர்சிபி கேப்டன்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், "நான் விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள் என்று சொல்வேன். அதை செய்தால் குறைந்தபட்சம் அவர்களுடைய அணியில் வெற்றிக்கான போராட்டம் இருக்கும். விராட் கோலி தன்னுடைய வீரர்களை வெற்றிக்கு கடுமையாக போராட வைப்பார்.

திரும்ப அவரை ஆர்சிபி கேப்டனாக்குங்க.. அப்படி செஞ்சா மட்டும்தான் - ஹர்பஜன் சிங் ஆதங்கம்! | Harbhajan Singh About Rcb Loss Ipl 2024

டு பிளஸ்சிசும் அதனை செய்ய வேண்டும். அவரால் சில வீரர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சதமடிக்கும் ஒரு வீரர் வெளியே அமர்ந்திருக்கிறார்.

டு பிளஸ்சிஸ் கேப்டனாக இருப்பதால் விராட் கோலி எதுவும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருக்கிறார். எனவே விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள். அவருடைய தலைமையில் இந்த அணி போராடி பின்னர் வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.