ஹர்திக்கை எதிர்க்க வேண்டாம்; சிக்னல் காட்டிய விராட் - சம்பவத்தை கவனிச்சீங்களா?
விராட் கோலி வான்கடே ரசிகர்களிடம் சிக்னல் காட்டிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
ரசிகர்கள் எதிர்ப்பு
மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பொறுப்பேற்ற முதலே அணியின் ரசிகர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.

5 முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கியதற்கும் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த போட்டியிலேயே மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பவுண்டரி லைனில் இருந்த போது, ரசிகர்கள் கோஷம் எழுப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அதற்கு ரசிகர்கள் செவிசாய்த்தபாடில்லை.
கோலி ஆதரவு
இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த போது, ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அப்போது மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு கோஷத்தை தொடங்கினர். இதனை பார்த்த விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவும் இந்திய வீரர் தான். எதிர்ப்பை கைவிடுங்கள் என சிக்னல் கொடுத்தார்.
Proud to stan a gentleman like him ❤ #KingKohli #Siraj #ViratKohli #GOAT pic.twitter.com/tvaQbcid55
— PANDIT SHIVAM SHUKLA (@Shivam_779_) April 12, 2024
தற்போது இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித், ஆஃப்கானிஸ்தான் அணியின் நவீன் உல் ஹக் ஆகியோரை ரசிகர்கள் கிண்டல் செய்த போது, விராட் கோலி ஆதரவாக சிக்னல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம் IBC Tamil
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
அமெரிக்க தூதுக்குழுவை தடுத்த ட்ரம்ப்! அர்த்தமற்ற விடயங்களுக்காக 18 மணி நேர விமானப் பயணங்கள் வேண்டாம் IBC Tamil