பாலியல் ரீதியாக அணுகினார்.. பிக் பாஸ் போட்டியாளர் மாயா கிருஷ்ணன் மீது புகார்!
பிக் பாஸ் போட்டியாளர் மாயா கிருஷ்ணன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியிருக்கிறது. இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா கிருஷ்ணன், அக்ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் கலந்துகொண்டனர்.
இதில் நடிகை மாயா கிருஷ்ணன் விக்ரம் படத்தில் நடித்து பிரபலமானவர், தற்பொழுது இவர் மீது புகார் ஒன்று எழுந்துள்ளது.
பாலியல் புகார்
இந்நிலையில், 2018ல் மாடல் அழகி அனன்யா என்பவர் இவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதில், "மாயா கிருஷ்ணனை 2016ஆம் ஆண்டு முதன்முறையாக சந்தித்தேன். எனக்கு அப்போது 18 வயதுதான் ஆனது. அவர் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார். ஒருகட்டத்தில் இருவரும் நெருக்கமாக பழகினோம். அப்போது நான் அவருடன் மட்டும்தான் பழக வேண்டும் என்ற ரீதியில் நடந்துகொள்ள ஆரம்பித்தார்.
எனது எல்லா முடிவுகளையும் அவரே எடுத்து என் மீது ஆதிகம் செலுத்தினார். அதேபோல் என்னுடைய பிற நண்பர்களையும் லாவகமாக துண்டித்தார். அதனால் அவர்கள் என்னை வெறுத்தனர்.
பொற்றோரையும் ஒதுக்க செய்தார். நிலைமை இப்படி இருக்க என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். மேலும் பாலியால் ரீதியாகவும் பயன்படுத்தினார்" என்று கூறியுள்ளார். ஆனால் இது பற்றி நடிகை மாயா இது அனைத்தும் பொய் என்று விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.