இவுங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே நெருக்கமா..? விழிக்கும் ரசிகர்கள்
நேற்று துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பலரை குறித்தும் தற்போது தேடுதல்கள் வேகமெடுத்துள்ளன.
பிக் பாஸ் 7
நேற்று அக்டோபர் 1-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் துவங்கியது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் நேற்று அறிமுகமான போட்டியாளர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இதில் முதல் நாளில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகியிருக்கின்றனர். கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, விசித்ரா, மாயா கிருஷ்ணா, ஐஸ்வர்யா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், வினுஷா தேவி, அக்ஷயா உதயகுமார், பவா செல்லதுரை, நிக்சன், விக்ரம், விஷ்ணு விஜய், விஜய் வர்மா, சரவணன், ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.இவர்கள் குறித்து பரவலாக ரசிகர்கள் தேடுதல்களை நேற்று முதலே சமூகவலைத்தளத்தில் துவங்கி விட்டனர்.
ரவீனா தாஹா - மணி சந்திரா
இதில் முக்கியமாக இரண்டு நபர்களை குறித்து தற்போது புது புரளி ஒன்று வேகமாக பரவ துவங்கி இருக்கின்றது. ராட்சசன், விஜய் டிவி சீரியல் போன்றவற்றில் நடித்து பிரபலமான ரவீனா தாஹா மற்றும் மணி சந்திரா குறித்தே தற்போது பெரிய பேச்சுக்கள் அடிப்பட துவங்கியுள்ளன.
டான்சரான மணி சந்திரா மற்றும் ரவீனா தாஹா இருவரும் முன்னரே துபாய் போன்ற வெளிநாடுகளில் ஒன்றாக ஊர் சுற்றுவது, வீடியோக்கள் வெளியிடுவது என இருவர் பற்றியும் அவ்வளவு புகைப்படங்களும், வீடியோக்களும் உள்ளன. இதனை வைத்து இருவரும் முன்னரே பழக்கமா? அல்லது காதலித்து வருகின்றனரா? என்ற கேள்விகள் தற்போது ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது.