நா செத்துட்டேன்னு சொல்லிட்டாங்க.. உங்க தேவைக்காக இப்படியா பண்ணுவீங்க? - கடுப்பான நடிகை!

Tamil Cinema Tamil Actress
By Vinothini Oct 03, 2023 04:30 PM GMT
Report

நடிகை தனக்கு நடந்த சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகை தீபா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை மற்றும் டப்பிங் கலைஞராக இருப்வபார் தீபா வெங்கட். இவர் தென்னிந்திய சினிமாவில் பல டாப் நடிகைகளான நயன்தாரா, ஐஸ்வர்யா ராய், ஜோதிகா, மனிஷா கொய்ராலா, சிம்ரன், அனுஷ்கா ஷெட்டி போன்றவர்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

actress-deepa-venkat-open-interview

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் தமிழில் ஐஸ்வர்யா ராவுக்கும் குரல் கொடுத்தார். பல வருடங்களாக நடிகை நயன்தாராவிற்கு வாய்ஸ் கொடுத்து வந்தவரும் இவர்தான். இவர் டப்பிங் மட்டுமின்றி பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிறு வயதிலேயே திருமணம்.. சந்தேகப்பட்டு அப்படி பேசுவார், எல்லாமே ஒரு அளவு தான் - கலங்கிய நடிகை!

சிறு வயதிலேயே திருமணம்.. சந்தேகப்பட்டு அப்படி பேசுவார், எல்லாமே ஒரு அளவு தான் - கலங்கிய நடிகை!

பேட்டி

இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு நிகழ்ந்தது குறித்து வெளிப்பாயாக பேசியுள்ளார். அதில், உங்களை ரொம்ப டிஸ்டர்ப் செய்த ரூமர் எது? என்ற கேள்விக்கு அவர், " நா செத்துட்டேன்னு சொல்லிட்டு யூடியூப்ல கண்ணீர் அஞ்சலி, ஆறுதல் சொல்லி பல வீடியோக்களை பகிர்ந்து வந்தனர். நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டு பேசினர், எனக்கு மட்டுமல்ல என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் அது ரொம்ப கஷ்டமா இருந்தது.

actress-deepa-venkat-open-interview

இதனால் தான் நான் எந்த யூடியூப் சேனலுக்கும் இண்டர்வீயூ தருவதில்லை. நிறைய யூடியூப் சேனல் பதிவிட்டுருந்தனர், நான் கோவிட்-ல செத்துட்டேன்னு, இந்த மாதிரி பொய்யான செய்தியை பரப்புவதில் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

செக் பண்ணி பார்க்கமாட்டாங்களா?, உங்க வீட்டில் யாரையாவது இப்படி போடுவீர்களா?" என்று கோபத்துடன் பேசினார். இது தற்பொழுது வைரலாகி வருகிறது.