ஹனுமான் படத்தை பார்த்து தியேட்டரிலேயே சாமியாடிய பெண் - வைரலாகும் வீடியோ!
தியேட்டரில் பெண் ஒருவர் சாமியாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஹனுமான்
ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ஹனுமான். பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் வினய் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டையாடி வருகிறது. 3 வாரங்கள் ஆன நிலையில், தொடர்ந்து தியேட்டருக்கு சென்று மக்கள் படத்தை கண்டு வருகின்றனர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், தியேட்டர் ஒன்றில் சமீபத்தில் ஹனுமான் திரைப்படத்தை பார்த்த ரசிகை ஒருவர் சாமி வந்து ஆடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Hanuman Effect ???
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 30, 2024
pic.twitter.com/gjd4mXJAuq
உடனே அவரை பார்த்து ஹனுமானே வந்து விட்டார் என ரசிகர்கள் கையெடுத்து கும்பிடுகின்றனர். அவரது குடும்பத்தினர் சமாதானம் செய்ய முயல்கின்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.