‘’ஆத்தா வந்திருக்கேன் டா முடியாது போ ‘’ - கொரோனா தடுப்பூசி செலுத்த பயந்து திடீரென சாமியாடிய நபர்

1 month ago

கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டம் சாக்காபுரி கிராம மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்னமும் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிர் பிரியும் என நம்பும் அவர்களுக்கு, மருத்துவக்குழுவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைகின்றன .

இந்த நிலையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்த மருத்துவக்குழுவினர் சென்றபோது ராமண்ணா என்பவர் திடீரென சாமியாடி அம்மன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம் என சொல்வதாக கூறி மணி அடித்து சுற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு நபர் வீட்டின் கூரையில் அமர்ந்து கீழே விழுந்து தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டியுள்ளார்.

தற்போது புதிதாக பரவி வரும் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ்  10 மடங்கு வீரியம் கொண்டது என்பதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ,இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ள  சாக்காபுரி கிராம மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் அப் பகுதி சுகாதரத்துறையினர்.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்