திருமண முறிவுக்கு ஹன்சிகாவே காரணம் - நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
ஹன்சிகா மோத்வானியின் குடும்பத்தினர் மீது நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹன்சிகா மோத்வானி
மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதன் பிறகு தமிழில் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு தனது காதலரான சோஹேல் கதுரியா என்பவரை ஹன்சிகா திருமணம் செய்தார்.
நடிகை புகார்
இந்நிலையில் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடிகை ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மாதா கி சௌகி என்ற ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை முஸ்கன் நான்சி ஜேம்ஸ்.
இவர் நடிகை ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியின் மனைவி ஆவார். கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்த நிலையில், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் முஸ்கன் நான்சி, மும்பையின் அம்போலி காவல் நிலையத்தில் ஹன்சிகா குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார்.
வழக்குப்பதிவு
இந்த புகாரில், தனது மாமியார் தன்னிடம் விலையுயர்ந்த பரிசுகளையும் பணத்தையும் கேட்டதாக தெரிவித்துள்ளார். தனது மாமியார் ஜோதி மோத்வானி மற்றும் நாத்தனார் ஹன்சிகா ஆகியோர் தனது திருமணத்தில் தலையிட்டதாகவும் இதனால் தான் கணவருடனான உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டு குறித்து ஹன்சிகா குடும்பத்தினர் தரப்பில் பதில் எதுவும் அளிக்கவில்லை.