அதனால்..கணவரை வேறு அறையில் தூங்க சொல்வேன் - ஆசையை பகிர்ந்த ஹன்சிகா!

Hansika Motwani
By Sumathi Jun 30, 2023 05:30 PM GMT
Report

நடிகை ஹன்சிகா அவருக்கு பிடித்த பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. கடந்த ஆண்டு சொஹைல் கதூரியாவை திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 18 வயதில் இருந்து எனக்கு ஹேண்ட்பேகுகள் மீது ஆசை ஏற்பட்டது.

அதனால்..கணவரை வேறு அறையில் தூங்க சொல்வேன் - ஆசையை பகிர்ந்த ஹன்சிகா! | Hansika Wants Husband To Sleep In Different Room

என் முதல் ஹேண்ட்பேக் Louis Vuitton பிராண்ட். ரூ. 1 லட்சத்திற்கு கீழ் வாங்க நினைத்தேன். ஆனால் முடியவில்லை. என் எல்.வி. பேக் எனக்கு மிகவும் ராசியானது. என் அனைத்து ஹேண்ட்பேகுகளும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் உள்ளது. கடந்த ஆண்டு பாரீஸ் சென்றபோது வாங்கிய கெல்லி பேக் தான் தற்போது எனக்கு மிகவும் பிடித்த ஹேண்ட்பேக்.

 பொக்கிஷம்

நான் சொஹைல் கதூரியாவுடன் டின்னருக்கு வெளியே சென்றால் இரண்டு சேர் அல்ல மூன்று சேர் இருக்கும் டேபிளை தான் புக் செய்வோம். என் ஹேண்ட்பேகிற்கு என்று எப்பொழுதும் தனி சேர் ஒதுக்கிவிடுவேன். அந்த அளவுக்கு என் ஹேண்ட்பேகுகளை பொக்கிஷமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அதனால்..கணவரை வேறு அறையில் தூங்க சொல்வேன் - ஆசையை பகிர்ந்த ஹன்சிகா! | Hansika Wants Husband To Sleep In Different Room

நான் மும்பையில் இருந்து ஒரு நாளுக்கு மட்டும் வெளியூர் செல்வதாக இருந்தாலும் கூட என் படுக்கை முழுவதும் பேகுகளாக இருக்கும். அதனால் என் கணவர் என் படுக்கையில் இல்லாமல் வேறு அறையில் தூங்குவதையே விரும்புவேன் எனத் தெரிவித்துள்ளார்.