சிம்பு - ஹன்சிகா பிரிந்ததற்கு காரணமே இதுதான் - பிரபலம் பகிர்ந்த ரகசிய தகவல்
சிம்பு - ஹன்சிகா பிரிந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு - ஹன்சிகா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் தனது அசாத்திய திறமையால் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவருடைய திருமணம் குறித்த தகவலும் இணையத்தில் அவ்வபோது வைரலாவது வழக்கமான ஒன்று.
காதல் முறிவு
இதற்கிடையில், சிம்புவும் நயன்தாராவும் காதலித்து பிரேக் அப் செய்துக்கொண்ட சம்பவம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனையடுத்து பல வருடஙக்ள் சிங்கிளாக இருந்த சிம்பு ஹன்சிகாவை காதலித்தார்.
ஆனால் அதுவும் பிரிவிலேயே முடிந்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, "சிம்பு சிறு வயதில் இருந்தே எதற்குமே கஷ்டப்பட்டதில்லை. அதன் காரணமாக சிம்புவுக்கு எல்லாமே ஜாலிதான்.
குழந்தைகளின் விளையாட்டு இயல்பு மாறாமல் அவரிடம் இருந்தது. அதனை பலமுறை பார்த்திருக்கிறேன். சிம்புவின் நடத்தைதான் ஹன்சிகா - சிம்பு காதல் முறிவுக்கு காரணம். சிம்பு கொஞ்சம் துடுக்கான கேரக்டர்.
அது ஹன்சிகாவுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். எனவே பிரேக் அப் செய்திருப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.