சிம்பு படத்துல எதுக்கு நடிச்சோம்னு ஃபீல் பண்ணேன் - மனம் திறந்த நடிகர்!
பிரபல நடிகர் ஒரு பேட்டியில் தான் நடித்த சிம்புவின் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பத்துதல படம்
பிரபல நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி வெளியாகியிருந்தது.
இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அதில் சிம்புவின் தங்கையாக அனு சித்தாராவும் சந்தோஷ் பிரதாப்பின் கணவராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இவர் தாயம், ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை, கதிர், கொன்றால் பாவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்கு கம்பேக்காக அமைந்தது.
சந்தோஷ் பேட்டி
இந்நிலையில், இவர் பத்துதல படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "சிம்புவின் பத்து தல படத்தில் ஏன் நடித்தோம் என்ற பயத்துடன் இருந்தேன்.
ஆனால் இந்தப் படம் வெளியான பின்னர் ரசிகர்கள் பாராட்டினார்கள்.
அதேநேரம் பத்து தல படத்தில் சிம்புவுடன் நடித்தது பற்றி வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்தேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும், இவர் சிம்புவால் தான் பயந்தேன் என்று கூறியது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.