இளைஞரை கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடூரம் - பகீர் பின்னணி!
இளைஞர் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்?
கர்நாடகா, சேமேஷெட்டிஹள்ளி கிராமத்தின் பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் இளைஞர் உடல் ஒன்று கண்டறியப்பட்டது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார், மரத்தில் தூக்கில் தொங்கிய இளைஞன் உடலை மீட்டனர். அவரது கையில் லட்சுமி என்ற பச்சை குத்தப்பட்டிருந்தது.
கொடூர கொலை
காதல் விவகாரம் காரணமாக அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து, கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.