கணவனை தூக்கில் தொங்கவிட்டு கதறி அழுது நாடகமாடிய டீச்சர் - கள்ளக் காதலன் உட்பட 3 பேர் கைது!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் கொலை
சேலம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (32) இவர் நெசவு தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி நிவேதா (27) டீச்சராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளது. நிவேதாவுக்கு வித்யா என்ற பள்ளித்தோழி உள்ளார். வித்யா மூலம் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த தினேஷ் என்பவர் நிவேதாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.
அதுவும் 4 மாதத்திற்கு முன்னர் தான். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த கள்ளக் காதலினால் நிவேதா எந்நேரமும் போனில் இருந்துள்ளார்.
இந்த காதல் குறித்து கணவன் சுந்தர்ராஜுக்கு தெரியவர நிவேதாவை கண்டித்து போனை பறித்து வைத்துள்ளார்.
கள்ளக் காதல் கணவனுக்கு தெரிய வந்ததாலும், தினேஷுடன் பேச முடியாத ஏக்கத்திலும் கணவனை தீர்த்துக் கட்ட முடிவிடுத்துள்ளார் நிவேதா.
இதற்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார் தினேஷ். கடந்த 17ம் தேதி இரவு கணவனுக்கு நிறைய தூக்க மாத்திரைகளைக் கொடுத்து தூங்க வைத்துள்ளார் நிவேதா.
பிறகு வீட்டிற்குள் கள்ளக் காதலன் தினேஷையும் ,தோழி வித்யாவையும் வீட்டிற்குள் வரவழைத்துள்ளார் . பின்னர் தினேஷ் தலையணையை சுந்தர்ராஜின் முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். இதை தற்கொலையாக மாற்ற சுந்தர்ராஜை தூக்கில் தொங்க விட்டுள்ளனர்.
மனைவி கைது
இந்நிலையில் சுந்தர்ராஜின் கழுத்தில் காயங்கள் இருப்பதைப் பார்த்த அவரின் அப்பா சந்தேகமடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் இதுகுறித்து மனைவி நிவேதாவிடம் விசாரணை செய்து கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்டபோது உளர ஆரம்பித்திருக்கிறார்.
இறுதியில் நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். இதற்குக் காரணமும் கள்ளக் காதல்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நிவேதா, கள்ளக் காதலன் தினேஷ் மற்றும் உடந்தையாக இருந்த தோழி வித்யா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.