பூங்காவில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி - கதறிய பெற்றோர்!
பூங்காவில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடைய மகள் கோபிகா(19). அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பதாக பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த கோபிகா வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் அவரை தேடியதில் எங்கும் கிடைக்கவில்லை.
பதறிய பெற்றோர்
இந்நிலையில், பூங்காவில் மாணவி ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிந்தார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இறந்த மாணவி கோபிகா எனத் தெரிந்த நிலையில் பெற்றோர் வந்து பார்த்து கதறியுள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.