சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை; பிறந்தநாளில் நேர்ந்த சோகம் - அதிர்ச்சி காரணம்!

Serials Death Actress
By Jiyath Oct 31, 2023 03:24 AM GMT
Report

மலையாள சீரியல் நடிகை ரெஞ்சுஷா மேனன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சீரியல் நடிகை

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் ரெஞ்சுஷா மேனன் (35). இவர் மலையாள சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார். மேலும், சீரியல் தயாரிப்பிலும் இவர் ஈடுபட்டு வந்தார். ஸ்திரீ, நிழலாட்டம், மகளுடே அம்மா, பாலாமணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை; பிறந்தநாளில் நேர்ந்த சோகம் - அதிர்ச்சி காரணம்! | Malayalam Actress Renjusha Menon Suicide Kerala

ரெஞ்சுஷாவின் கணவர் மனோஜ் என்பவரும் சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரெஞ்சுஷாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் சக நடிகர்கள் ஷூட்டிங் செட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால் ரெஞ்சுஷா செட்டுக்கு செல்லவில்லை, போனில் அழைத்தும் எடுக்கவில்லை. இதனையடுத்து இந்த விவரம் அவரது கணவர் மனோஜுக்கு தெரிவித்துள்ளனர். அவர் வெளியே இருந்ததால் ரெஞ்சுஷாவுக்கு போனில் அழைத்துள்ளார். அப்போதும் அவர் எடுக்காததால், அவர்கள் தங்கியிருக்கும் பிளாட்டின் செக்யூரிட்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

குழந்தை இருக்கு; இப்போ அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்.. நடிகை மீனா வெளிப்படை!

குழந்தை இருக்கு; இப்போ அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்.. நடிகை மீனா வெளிப்படை!

தூக்கிட்டு தற்கொலை

இதனையடுத்து செக்யூரிட்டி சென்று பார்த்தபோது ரெஞ்சுஷா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை; பிறந்தநாளில் நேர்ந்த சோகம் - அதிர்ச்சி காரணம்! | Malayalam Actress Renjusha Menon Suicide Kerala

உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் ரெஞ்சுஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் "ரெஞ்சுஷா சீரியல் ஒன்றை சொந்தமாக தயாரித்ததில் ஏற்பட்ட நஷ்டத்தில் கடன் பெருகியதாகவும், கடந்த சில மாதங்களாக நிதி நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களுக்கும், சக நடிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதனையடுத்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் ரெஞ்சுஷா மேனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.