குழந்தைகளை பிணைக்கைதிகளாக வைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் மிரட்டல் - வெளியான அதிர்ச்சி வீடியோ!
ஹமாஸ் தீவிரவாதிகள் குழந்தைகளை பிணைக்கைதிகளாக வைத்து மிரட்டும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
போர்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் இருக்கும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே கடந்த 7ம் தேதி போர் தொடங்கியது. இருதரப்புக்கும் இடையே தீவிரமாக சண்டை நடைபெற்று வருகிறது. முன்னதாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் குழந்தைகள் மற்றும் பெண்களை பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இவர்களை விடுவித்தால்தான் காசாவுக்கு தண்ணீர், மின்சாரம், உணவு வழங்கப்படும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து இருந்தது. பின்னர் ஹமாஸ் தீவிரவாதிகள் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கீறி, வயிற்றில் இருந்த குழந்தையை கொன்று வீடியோ பதிவிட்டு காட்டுமிராண்டித்தனத்தை காட்டினர்.
வீடியோ
இந்நிலையில், புதிய வீடியோ ஒன்றை ஹமாஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அதில் ராணுவ உடையில் கையில், மடியில் குழந்தைகளை வைத்துக் கொண்டு, துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டுள்ளனர். மேலும், "ஹமாஸ் தீவிரவாதிகள் குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்து இருக்கின்றனர்.
அவர்களது அறைக்கு அருகே அந்தக் குழந்தைகளின் கொல்லப்பட்ட பெற்றோர் சடலம் இருக்கிறது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது. குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பயத்தில் அழுகின்றனர். இவர்கள்தான் தீவிரவாதிகள்.
இவர்களை தோற்கடிக்கப் போகிறோம்" என்று இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் பதிவிட்டுள்ளனர். இந்தக் குழந்தைகளை தங்களுக்கு பாதுகாப்பு அரணாக ஹமாஸ் தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர் என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும், மறுபக்கம் நாங்கள் அவர்களை கொடுமைப்படுத்தவில்லை நன்றாகத்தான் வைத்திருக்கிறோம் என்று உலகை நம்ப வைக்கும் செயலாக இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.