ஆபரேஷன் அஜய்.. இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் மீட்பு!

India Israel
By Vinothini Oct 13, 2023 04:50 AM GMT
Report

இஸ்ரேல் நாட்டில் இருந்து 212 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

போர்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் இருக்கும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே கடந்த 7-ம் தேதி போர் தொடங்கியது. இருதரப்புக்கும் இடையே தீவிரமாக சண்டை நடைபெற்று வருவதால், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. அங்கு மொத்தமாக 18,000-க்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர்.

212-indians-returned-from-israel

இவர்களை மீட்கும் பனி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், பாலஸ்தீனில் 20 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஆபரேசன் அஜய் என்ற பெயரில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ள 2460 பேரை பல்வேறு விமானங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம் - பனி சிகரங்களில் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி!

ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம் - பனி சிகரங்களில் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி!

இந்தியர்கள் மீட்பு

இந்நிலையில், சி17,ஐஎல் 76 உள்ளிட்ட விமானங்களும், சி130ஜே ரக விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் வரும் 18ஆம் தேதி வரை விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நமது அண்டை நாடான நேபாளம், சிறப்பு விமானம் மூலம் 253 மாணவர்களை மீட்டுள்ளது.

212-indians-returned-from-israel

தற்பொழுது 212 பயணிகளுடன், இரவு 11.30 மணிக்கு டெல் அவிவ் நகரில் இருந்து புறப்பட்ட விமானம் டெல்லி வந்தடைந்தது. 212 இந்தியர்களை வரவேற்ற மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் அவர், "இந்தியர்களை நமது அரசு பத்திரமாக மீட்டு அவர்களது வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும். யாரையும் தனியே விட்டுவிட மாட்டோம். நமது பிரதமர் இதில் உறுதியுடன் இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.