போர் நடக்கும் இஸ்ரேல் நாட்டில் இருந்து தப்பித்து ஓடிவந்த நடிகை!!
இஸ்ரேல் நாட்டில் நடந்து வரும் போரின் நடுவே இந்திய நாட்டை சேர்ந்த நடிகை ஒருவர் அங்கு சிக்கியிருந்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இஸ்ரேல் பதற்றம்
இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் பயங்கரவாதத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கு இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றது. காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுக்குநூறாகிய கட்டிடங்களுக்கு இடையே எவரும் சிக்கியுள்ளனரா என்று பாலஸ்தீனிய ராணுவத்தினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா். இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலில் சிக்கி தவித்த நடிகை
இந்நிலையில், இந்த போர் காரணமாக 39வது ஹய்ஃபா இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல்(Haifa International Film Festival) திரைப்பட விழாவுக்குச் சென்ற நடிகை நுஷ்ரத் அங்கு சிக்கியிருந்தார். இந்நிலையில், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தற்போது அவர் அங்கிருந்து பத்திரமாக மீண்டு இந்தியா வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக நுஷ்ரத் பாருச்சா தரப்பில், நுஷ்ரத் தூதரகத்தின் உதவியுடன் பத்திரமாக நாடு திரும்புகிறார் என்றும் நேரடி விமானம் இல்லாததால், கனெக்டிங் விமானம் மூலம் அவர் இந்தியா திரும்புவார் என தெரிவித்தார். பல தரப்பட்ட நகர்வுகளை அடுத்து இறுதியாக நடிகை நுஷ்ரத் பருச்சா தூதரகத்தின் உதவியுடன் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளார்.