கொத்துக் கொத்தாக முடி கொட்டுகிறதா? கவலை வேண்டாம்... இதோ சூப்பர் டிப்ஸ்

Hair Growth
By Nandhini Jul 13, 2022 12:29 PM GMT
Report

வேதனைப்படுத்தும் முடி உதிர்வு

சில பேருக்கு முடியின் மேல் ரொம்ப ரொம்ப ஆசை இருக்கும். ஆனால், முடி கொத்துக் கொத்தாக கொட்டிக்கொண்டே இருக்கும். பெண்களுக்கும், ஆண்களுக்கும் அழகே அழகே முடி தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு இல்லை.

ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும். அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறிவிடுகிறது.

சிலருக்கோ இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பித்து விடுகிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணம். எனவே, கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும்.

hair tips

கவலை விடுங்க... முடி கொட்டுவதை நிறுத்தி, வேகமாக முடி வளர வைக்கும் சூப்பர் டிப்ஸ் இதோ -

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் - 100 கிராம்
  • ஆலிவ் எண்ணெய் - 100 கிராம்
  • பாதாம் எண்ணெய் - 100 கிராம்
  • வைட்டமின் எண்ணெய் - 100 கிராம்
  • கடுகு எண்ணெய் - 100 கிராம்
  • நல்லெண்ணெய் - 100 கிராம்
  • கரிசலாங்கண்ணித் தைலம் - 100 கிராம்
  • பொன்னாங்கன்னித் தைலம் - 100 கிராம்
  • மருதாணித் தைலம் - 100 கிராம்
  • வேம்பாலம் பட்டை - 100 கிராம்
  • சூரியகாந்தி எண்ணெய் - 100 கிராம்

செய்முறை -

மேலே கொடுத்த பொருட்களை எடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். பின்னர், இந்த கவவை ஆறினபின்பு, இந்த எண்ணெய்யை எடுத்து, முடி வேர்களில் படும்படி தடவி, நன்கு மசாஜ் செய்து தேய்த்து வந்தால் தலைமுடி ஆரோக்கியமாக வளர உதசி செய்யும்.