131 பேரை பலி கொண்ட ஹத்ராஸ் சம்பவம் - ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர் இரங்கல்
கடுமையான நெரிசலில் சிக்கி 131 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஹத்ராஸ் சம்பவம்
உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது.
இதில் கூட்டம் முடிந்து வெளியேறிய போது நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 131 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின், வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
அதிபர்கள் இரங்கல்
ஹத்ராசில் நடந்த சம்பவம் தனக்கு வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும், ஜப்பான் வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் ஜப்பான் பிரதமர் புமியே கிஷாடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஹத்ராஸ் சம்பவம் அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.