மத வழிபாட்டு கூட்ட நெரிசல் - 116 பேர் பலி ; ரூ 2 லட்சம் நிவாரணம் அளித்த பிரதமர் மோடி

Narendra Modi Uttar Pradesh
By Karthikraja Jul 03, 2024 04:35 AM GMT
Report

 உத்திர பிரதேச மத வழிபாட்டுக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

ஹத்ராஸ்

உத்திர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ், சிக்கந்தராவ் நகரில் போலே பாபா சத் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். 

uttar pradesh

இந்த நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி - கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கு மேற்பட்டோர் பலி

ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி - கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கு மேற்பட்டோர் பலி

நிவாரண நிதி

ஹாத்ரஸ் மத வழிபாட்டுக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி, தேசிய நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் அறிவித்துள்ளார். 

narendra modi

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்துதலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர்கள், உ.பி. முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.