அங்கேயே நான் தூங்கிவிட்டேன்; ட்ரம்ப் உடனான காரசார விவாதம் - பைடன் விளக்கம்!
தனது விவாதம் குறித்து ஜோ பைடன் விளக்கமளித்துள்ளார்.
அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-க்கான முதல் நேரடி விவாதம் நடைபெற்றது. இதில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்றனர்.
உள்நாட்டு விவகாரம் முதல் உலக நாடுகள் வரையிலான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர். இதில் ட்ரம்ப் அதிரடியாக விவாதத்தை முன்வைத்தார். இதில் பைடன் செயல்பட்ட விதம் விமர்சனத்துக்குள் ஆனது. அவர் பேச முயன்ற போது தடுமாறினார்.
சர்ச்சைக்கு விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அதிபர் பைடன், “இது நான் கூறும் சாக்கு அல்ல. இது எனது விளக்கம். விவாதத்தில் நான் ஸ்மார்ட்டாக செயல்பட வில்லை. அதற்கு முதல் நாள் இரவு எனக்கு சரியான தூக்கம் இல்லை.
விவாத நிகழ்வுக்கு முன்பாக உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது இதற்கு காரணம். நான் எனது ஊழியர்கள் சொன்னதை கேட்கவில்லை. அதோடு விவாத மேடையில் கிட்டத்தட்ட நான் தூங்கிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.