மசூதியில் தொழுகை ; மர்ம நபர் நடத்திய கொடூர தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு!
மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 6 பேரை சுட்டு கொன்றனர்.
மசூதி தொழுகை
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணம், கசாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷியா மசூதியில் இரவு வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென நுழைந்து அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தள்ளினர்.
இதில், தொழுகையில் ஈடுபட்டு கொண்டு இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார் எனவும் தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். கொல்லப்பட்டவர்களில் மசூதியின் இமாமும் ஒருவர் என தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த Chapter...! கிருஷ்ணர் பிறந்த மதுராவில் கோவிலை இடித்து மசூதி கட்டிய முகலாய மன்னர் - இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம்
கொடூர தாக்குதல்
ஷியா முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலமான இந்த மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக உள்துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் குவானி கூறியுள்ளார்.
மேலும் இந்த தாக்குதலுக்கு முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் வன்மையாக கண்டித்துள்ளார்.
இதை தொடர்ந்து, ஐ.எஸ். அமைப்பின் துணை அமைப்பு, ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களுக்கு முக்கிய போட்டியாக இருந்து வருகிறது. பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் ஆகிய பகுதிகளில் ஷியா மக்கள் அதிகம் இருக்கும் இடங்களை அடிக்கடி குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.