அல் அக்சா மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்? – குண்டு மழையில் காசா..!
இஸ்லாமியர்களின் 3வது புனித தளமான அல் அக்சா மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3000 பேர் உயிரிழப்பு
கடந்த சனிக்கிழமை ( அக்டோபர் 7 ) இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது. இஸ்ரேல் தனது படைகள் மூலம் காசா மீது வான்வழித்தாக்குதல் நடத்தி வருகிறது.
தொடர்ந்து காசா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம். இந்த போரில் சுமார் 3000 மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அல் அக்சா மசூதி மீது தாக்குதல்
6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அல் அக்சா மசூதி மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த மசூதிக்கு முகமது நபி வந்துள்ளதாக நம்பிக்கை உள்ள நிலையில் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள அல் அக்சா மசூதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா கண்டனம்
ஐ.நா மூலம் இரண்டு லட்சத்து 70 ஆயிரம் மக்கள் ஏற்கனவே காசா பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். காசா பகுதியில் மட்டும் 22 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். உலகிலேயே மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் ஒன்றாக காசா இருந்து வருகிறது.
காசா மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐந்து நகரங்களில் தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய விமானங்கள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் பொதுமக்களையும் அப்பாவி மக்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஐ.நா உத்தரவிட்டிருந்தது.