அடுத்த Chapter...! கிருஷ்ணர் பிறந்த மதுராவில் கோவிலை இடித்து மசூதி கட்டிய முகலாய மன்னர் - இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம்
அயோத்தி ராமர் கோவில் பாபர் மசூதியை அடுத்து தற்போது மதுராவின் பக்கம் சில கேள்விகள் வர துவங்கியுள்ளன.
மதுரா
விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் பிறந்த இடமாக புராணங்களில் குறிப்பிடப்படுவது மதுரா நகர். இந்த இடமும் உத்திர பிரதேச மாநிலத்தில் தான் இருக்கின்றது.
இந்நிலையில், தான் மதுராவில் இருந்த கோவில் ஒன்றை இடித்து முகலாய மன்னர் மசூதி கட்டியதாக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் தகவல் அளித்துள்ளது.
கோவில் இடித்து மசூதி
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அஜய் பிரதாப் சிங் என்பவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் மதுராவில் ஷாயி ஈத்கா மசூதி என்பது கோவிலை இடித்து தான் கட்டப்பட்டது என ஆக்ரா பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனால், அக்கோவிலை கிருஷ்ண ஜென்மபூமி கோயில் என குறிப்பிடாமல், கேசவ்தேவ் கோயில் எனத் தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக 1920-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் பதிவான அரசு கெஜட் குறிப்புகளை காட்டியுள்ளது.