அயோத்தியில் அசைவ KFC'க்கு கடை தரோம்...ஆனா ஒரு கண்டிஷன்..! மாவட்ட நிர்வாகத்தின் செக்..!!
அயோத்தி பெரும் சுற்றுலா தலமாக மற்ற அம்மாவட்ட, மாநில அரசுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அயோத்தியில் KFC
மக்களுக்கான அடிப்படை தேவைகளை முறையான ரீதியில் வழங்கிட பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது உத்திர பிரதேச அரசு. இதில், முக்கியமான இடத்தில் உணவு மேம்படும் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு நட்சத்திர, வெளிநாட்டு உணவு நிறுவனங்கள், ஹோட்டல்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளிவருகின்றன. அதில், மிகவும் பிரபலமான KFC நிறுவனத்துடனும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதில் பல கேள்விகள் எழுகின்றன. அசைவ உணவு வழங்குதலில் பிரபலமான KFC''க்கு எப்படி அயோத்தியில் இடம் அளிக்கப்பட்டது என பலரும் யோசிக்கலாம். ஆனால், அங்கு தான் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளது.
அதாவது KFC நிறுவனத்திற்கு இடம் தர ஒப்புக்கொண்டாலும், அந்த கடையில் சைவ உணவு வகை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும் என்றும் strict கண்டிஷனும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அயோத்தியில் veg only Dominos, Pizza-Hut போன்ற கடைகள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.