வரலாறு காணாத மழை..26 பேர் உயிரிழப்பு - தாத்தளிக்கும் குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் !

Gujarat India Death
By Vidhya Senthil Aug 30, 2024 12:19 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 குஜராத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 5 நாட்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் 

குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சௌராஷ்டிரா , தேவபூமி துரவாகா, ஜாம்நகர், ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் போன்ற மாவட்டங்களில் 50 மிமீ முதல் 200 மிமீ வரை மழை பெய்துள்ளது. இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வரலாறு காணாத மழை..26 பேர் உயிரிழப்பு - தாத்தளிக்கும் குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் ! | Gujarat Floods Kills 26 People

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாகப் பெய்த கனமழையால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து சுமார் 17,800 பேர் வெளியேற்றப்பட்டனர்.மேலும் வதோதராவில் பெய்த கனமழையால் விஸ்வாமித்ரி நதி உடைத்துக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து, கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டனர்.

விடிய விடிய விடாத மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரம்!

விடிய விடிய விடாத மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரம்!

வரலாறு காணாத மழை

தொடர்ந்து ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வரலாறு காணாத மழை..26 பேர் உயிரிழப்பு - தாத்தளிக்கும் குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் ! | Gujarat Floods Kills 26 People

மேலும் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் கனமழை நிலவரம் குறித்து என்னுடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்ததார்.   மக்கள் மற்றும் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதலை வழங்கினார்.

மேலும் மத்திய அரசின் அனைத்து ஆதரவையும் உதவியையும் உறுதி செய்தார். குஜராத் இதுவரை அதன் சராசரி ஆண்டு மழையில் 105% பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.