விடிய விடிய விடாத மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரம்!
விடாமல் கனமழை பெய்ததால் நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கனமழை
கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது, இதனால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் நேற்று இரவு பரவலாக கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளம்
இந்நிலையில், சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி குளம்போல மாறியுள்ளதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. வெள்ளநீரில் தரைப்பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால் புளியம்பட்டியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.