இந்தியாவில் 50 ஆண்டுகளில் கள்ளச்சாராய மரணம் - குஜராத் முதலிடம்
இந்தியாவில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகமாக நிகழ்ந்தது குஜராத் மாநிலத்தில் தான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மது விலக்கு
இந்தியாவில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகமாக நிகழ்ந்தது குஜராத் மாநிலத்தில் தான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ள விசயம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள், டிஜிபி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சில பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் மது விற்பனைக்கு தடை உள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மது விற்பனை நடைபெறும். ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக காய்ச்சும் சாராயத்தை குடித்து உயிரிழப்பு ஏற்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.
[
]புள்ளி விவரங்கள்
கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் கள்ளச்சாராய மரணம் அதிகம் ஏற்பட்டது மது விலக்கு தடை உள்ள குஜராத் மாநிலத்தில் தான் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
1976- குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100 பேர் உயிரிழப்பு
1984- ஹரியானாவில் 44 பேர் பலி
1981- கர்நாடகாவில் 308 பேர் மரணம்
1982- கேரளாவில் 78 பேர் மரணம்
1986- குஜராத்தில் மேலும் 108 பேர் பலி
1987- குஜராத்தில் மீண்டும் 200 பேர் மரணம்
1992- ஒடிசாவில் 200க்கும் அதிகமானோர் மரணம்
2001- மகாராஷ்டிராவில் 27 பேர் பலி
2001 - தமிழ்நாட்டின் பண்ருட்டியில் 53 பேர் பலி
2004- மகாராஷ்டிராவின் மும்பையில் 87 பேர் மரணம்
2006- ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தில் 22 பேர் பலி
2008- கர்நாடகா, தமிழ்நாட்டில் 148 பேர் உயிரிழப்பு
2009- மேற்கு வங்கம் கொல்கத்தாவில் 27 பேர் இறந்தனர்
2009- உ.பி.யில் 29 பேர் பலி
2009- குஜராத்தில் 136 பேர் மரணம்
2010- உ.பி.யின் 2 மாவட்டங்களில் 35 பேர் பலி
2010- கேரளாவிம் மலப்புரத்தில் 23 பேர் உயிரிழப்பு
2011- ஆந்திராவில் 17 பேர் மரணம்
2011- மேற்கு வங்கத்தில் 170 பேர் பலி
2012- ஆந்திராவில் மீண்டும் 17 பேர் உயிரிழப்பு
2012- ஒடிஷாவில் மேலும் 31 பேர் மரணம்
2012- பஞ்சாப்பில் 18 பேர் உயிரிழப்பு
2013- உ.பி.யில் 40 பேர் மரணம்
2015- மகாராஷ்டிராவின் மும்பையில் 90 பேர் இறப்பு
2019- உ.பி, உத்தரகாண்ட் மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்
2019- அஸ்ஸாமில் 156 பேர் பலி
2023- தமிழ்நாட்டின் மரக்காணம், செங்கல்பட்டில் 30க்கும் மேற்பட்டோர் பலி
2024- தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் தற்போது வரை 37 பேர் பலி