நடுவர் தீர்ப்பால் சர்ச்சை; கொடூரமாக தாக்கிய ரசிகர்கள் - 100 பேர் பலி!
கால்பந்து போட்டியால் வந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கால்பந்து போட்டி
ஆப்பிரிக்கா நாடான கினியாவின் இரண்டாவது பெரிய நகரம் என்சரிகோர். இங்கு உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. இதனை காண ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் ஒன்றுக்கூடினர்.
இந்த போட்டியின் முக்கியமான நேரத்தில் நடுவர் ஒருவர் சர்ச்சையான தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு ரசிகர்கள் கால்பந்து மைதானத்திற்குள் நுழைந்தனர்.
100 பேர் பலி
இதனால் இரு தரப்பு ரசிகர்களும் பலமாக மோதிக்கொண்டனர். இந்த மோதல் கலவரமாகி ரசிகர்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
#Alerte/N’zérékoré : La finale du tournoi doté du trophée « Général Mamadi Doumbouya » vire au dr.ame… pic.twitter.com/fjTvdxoe0v
— Guineeinfos.com (@guineeinfos_com) December 1, 2024
மைதானம் அருகே காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு நடந்த கலவரக்காட்சிகள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.