Fact Check: ஊழியர்களுக்கு சட்டவிரோத விசா - Infosys-க்கு ரூ.238 கோடி அபராதமா?
Infosys-க்கு ரூ.238 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Infosys
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி. பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம்.
22 நாடுகளில் கிளை அலுவலகங்களை கொண்டுள்ளது. மொத்தமாக 1.4 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் இன்போசிஸ் ஊழியர்களுக்கு H-1B தொழில்விசா பெற வேண்டிய இடத்தில், B-1 பார்வையாளர் விசாக்களை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், அமெரிக்க குடிவரவு அமைப்பான ICE முழுமையான விசாரணை நடத்தியது.
ரூ.238 கோடி அபராதம்
அதில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், ஊதியம் மற்றும் தொழிலாளர் நல திட்டங்கள் ஆகியவற்றின் செலவுகளைத் தவிர்க்க முயன்றதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்க குடிவரவு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து 238 கோடி அபராதமாக செலுத்த ஒப்பு கொண்டுள்ளது. இது ஒரு இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்காவில் இதுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியின் உண்மை தன்மையை(Fact Check) சரிபார்த்ததில், இது 2013 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் என்றும், இது தற்போது வைரலாகி வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது.