நேரலையில் தர்ம அடி.. விவாத மேடையில் சரமாரியாக தாக்கிக்கொண்ட விமர்சகர்கள் - வைரலாகும் வீடியோ!
விவாத மேடையில் விமர்சகர்கள் அடித்து தாக்கிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நேரலை நிகழ்ச்சி
பாகிஸ்தான் நாட்டில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷேர் அப்சல் மார்வத் மற்றும் அங்கு இப்போது ஆளும் கட்சியாக உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியைச் சேர்ந்த அஃப்னானுல்லா கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிக்கொண்டிருந்த அவர்களின் விராதம் சூடுபிடிக்க இம்ரான் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்சல் மார்வத் திடீரென எழுந்து அஃப்னானுல்லா கானை ஓங்கி அவரது தலையில் அடித்தார்.
கைகலப்பு
இந்நிலையில், ஆத்திரமடைந்த அஃப்னானுல்லா கான் அடிக்க தொடங்கினார். இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர், அந்த நிகழ்ச்சி நெறியாளர் அவர்களை அமைதிப்படுத்த முயன்றனர், ஆனால் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர், இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
مرشد کو گالی دو گے تو مرید تو جواب دے گا ہی۔۔ اور جواب بنتا بھی ہے! کوئی تو ان کو انکی زبان میں سمجانے والا ہو!
— SB_Blog (@Bukhari2204) September 28, 2023
پکڑنا ہے یا چھوڑنا ہے ?? pic.twitter.com/i52eSgjrGL
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. நேரலை என்று கூட பார்க்காமல் இருவரும் சரமாரியாக தாக்கிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.