ஒரே துர்நாற்றம்.. இறந்துபோன 5 நாய்களின் உடலை பிரிட்ஜில் வைத்திருந்த பெண் - அதிர்ச்சி!
பெண் ஒருவர் இறந்துபோன நாய்களை பிரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. n
துர்நாற்றம்
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் மெக்லாலின் என்பவர் வீட்டில் இருந்து பயங்கரமான துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் மெக்லாலின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர், அந்த பெண் ஊனமுற்ற நாய்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்துள்ளார்.
அப்போது அங்குள்ள ஒரு பிரிட்ஜில் இறந்துபோன 5 நாயின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
மோசமான நிலை
இதனை தொடர்ந்து, அந்த வீட்டில் பல நாய்கள் மிக மோசமான நிலையில் இருந்தன. மேலும், வீடு குப்பை கிடங்கு போல் இருந்துள்ளது, அதில் இருந்த 55 நாய்கள் தண்ணீர் சாப்பாடு இன்றி மிக மோசமான நிலையில் இருந்துள்ளது.
அவற்றை போலீசார் உடனடியாக மீட்டு விலங்குகள் நல காப்பகத்தில் கொண்டு போய் விட்டனர். இதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளரான மெக்லாலினை (வயது 48) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.