ரயில் நிலையத்தில் கத்தி, ராடுடன் அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்கள் - 3 பேர் கைது!

Chennai Railways
By Vinothini Jul 19, 2023 10:28 AM GMT
Report

சென்னையில் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களுடன் தகராறு செய்தது பரபரப்பை ஏற்போடுத்தியுள்ளது.

தகராறு

சென்னை வேளச்சேரியில் பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரக்கோணம் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயில் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. அது சேப்பாக்கம் வந்தபொழுது அதில் 50-க்கும் மேற்பட்ட மாநில கல்லூரி மாணவர்கள் ஏறினர்.

college-students-clash-in-chennai-3-were-arrested

அவர்கள் திடீரென ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர், கடற்கரை ரயில் நிலையம் வந்தபொழுது அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி சண்டை போட்டுகொண்டனர்.

அதிரடி கைது

இந்நிலையில், இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் கத்தி, இரும்புராடு, கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இதனால் அங்கிருந்த மக்கள் அச்சத்திற்குள்ளாகினர். சுமார் அரைமணிநேரமாக இவர்களுக்கு இடையே சண்டை நடந்தது,

college-students-clash-in-chennai-3-were-arrested

பின்னர் அங்கிருந்த ரயில்வே போலீசார் சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களில் 3 பேர் மணிபாரதி, ரவிச்சந்திரன், லோகேஷ் ஆகிய மாணவர்களை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் சண்டை போட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.